சின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது…!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஃபிலிம்பேர் விருது விழாவில் 96 படத்தில் வந்த காதலே காதலே பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை பெற்றார் சின்மயி.

நேற்று டெல்லியில் நடந்த தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது .

சிறந்த ஒரிஜினில் திரைக்கதைக்கான தேசிய விருது சீ லா சவ்(இயக்குநராக முதல் படம்) படத்திற்காக ராகுலுக்கு கிடைத்துள்ளது. ராகுல் 7 ஆண்டுகளுக்கு முன்பு கற்றுக் கொண்ட மொழிக்காக விருது கிடைத்துள்ளது .