லாக்டவுனால் ஒரு மாதத்திற்கு மேல் மூடப்கொரோனா பட்டிருந்த மதுக்கடைகள் நேற்று அரசின் உத்தரவின் பேரில் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் மதுக்கடை முன்பு பெண்கள் வரிசையில் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்த இயக்குநர் ராம் கோபால் வர்மா ஒயின் ஷாப் முன்பு யார் வரிசையில் நிற்பது என்று பாருங்கள் என்று பதிவித்திருந்தார்.


இந்த ட்வீட்டை பார்த்த பாடகி சோனா மொஹபத்ரா உள்பட பலர் அவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர் .
தன்னை ஆளாளுக்கு விளாசுவதை பார்த்த ராம் கோபால் வர்மா தற்போது மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.


நான் ட்வீட் போட்டதன் நோக்கத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.. நான் அப்படிப்பட்டவன் இல்லை. ஆண்கள் மட்டுமே குடித்துவிட்டு அந்த நிலையில் பெண்களை துன்புறுத்துவார்கள் என்று தவறாக நினைக்கும் தலைவர்களுக்காக ட்வீட் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.