பிக்பாஸ்2ல் வெற்றி வாகை சூடிய ரித்விகாவுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து

சென்னை:

னியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ்2 நிகழ்ச்சியில்  வெற்றி வாகை சூடிய நடிகை ரித்விகாவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை ரித்காவி ஏற்கனவே பா.ரஞ்சித்தின் படங்களில் நடித்துள்ள நிலையில், அவருக்கு  இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து கூறியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், பிக்பாஸ்2 நிகழ்ச்சி  கடந்த ஜுன் மாதம் தொடங்கியயது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் இறுதியில், நடிகை ரித்விகா வெற்றி பெற்று பிக்பாஸ் கோப்பையையும், பரிசு பணத்தையும் அள்ளினார்.

தமிழ்ப்பெண்ணான ரித்விகாவின் வெற்றி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற்றது.
இநத்  நிலையில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்து டிவிட்டியுள்ளார்.

அதில்,  ரித்விகாவின் புகைப்படத்தை வெளியிட்டு, “வாழ்த்துக்கள் ரித்விகா, பெரும் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.