பா.ரஞ்சித்தின் ஆசை கற்பனையில் மட்டும்தான் நிறைவேறும்: இல.கணேசன்

சென்னை:

யக்குனர் பா.ரஞ்சித்தின்  ஆசை, அவரது கருத்துகள் கற்பனையில் மட்டுமே நிறைவேறும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் சமீப காலமாக அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தலித் அமைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர் அரசியல் கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  திராவிட இயக்கத்தால் தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றவர், பல்வேறு இன அமைப்பினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சியில் பேசியபோது,  “இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான்,  வேறு யாரும் கிடையாது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யாவின் மறுமணம் குறித்து பேசிய ரஞ்சித்,
கவுசல்யாவின் திருமணம் தமிழகத்தில் மிக முக்கியமான நிகழ்வு என்றும், சமூகத்தில் இது முக்கியமான மாற்றத்தை உருவாக்கும். இது பெரிய சமூக மாற்றத்தை நோக்கிய அடி என்று கூறியிருந்தார்.

பா.ரஞ்சித்தின் கருத்துக்கள் தமிழகத்தில் அரசியல் மற்றும் ஜாதிய ரீதியிலான மோதலை  உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன்,  தனித்தனி பட்டியலின கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதெல்லாம் பா.ரஞ்சித்தின் கருத்து, அவரது ஆசை. அவை கற்பனையில் மட்டுமே நிறைவேறும் என்றார்.

பல்வேறு காரணங்களுக்காக வேறுபட்டு இருக்கும் பட்டியல் இன அமைப்பினர் ஒன்றாக வருவது அரிது என்றும், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது ஒருபோதும் நடக்காத செயல் என்றவர்,  அவர்களின் பிரிவு களுக்கு உள்ளே ஒற்றுமை ஏற்படுமானால் அதனை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், பாஜகவுக்கு  அம்பேத்கரை கொண்ர்ட முழு உரிமை உள்ளது என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் மூன்றாவதாக ஓர் அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.