பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ரவி மரியா வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் ரவி மரியா.

ஆசை ஆசையாய், மிளகா போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி மரியா, மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா, மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.