எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்படும் ராஜராஜ சோழன் படம்

சென்னை:

பெருமை மிகு சோழ மன்னனான  ராஜ ராஜ சோழன் வரலாற்றை  திரைப்பபடமாக எடுக்க இயக்குனர்  எஸ்.பி.ஜனநாதன் முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் ராஜராஜ சோழன் திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ராஜராஜசோழன் வரலாற்றை திரைப்படமாக எடுக்க,  ‘இயற்கை’, ‘பேராண்மை’ ,‘ஈ’, ‘புறம்போக்கு’ போன்ற  படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன்  முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சிவாஜியின் நடிப்பில் ஏற்கனவே வெளியான படம்

தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவரா கருதப்படுபவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.  தற்போது தனது அடுத்த படமாக தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரபல சோழ அரசனான, ராஜ ராஜ சோழன்  பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.இதற்காக அவர் தஞ்சையில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார்.

ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கார்ட்டூன் கேலரி