சீன பொருட்களை எரித்த இயக்குனர்..

சீனா ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் இறந்தனர். அதற்கு பல தரப்பிலிருந்தும் வந்துக்கொண்டிருக் கிறது. திரைப்பட இயக்கு னர் ஷக்தி சிதம்பரம் சீனாவின் இந்த தாக்குதலை அறிந்ததிலிருந்து கோபத்தில் இருந்தார்.

தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நேற்று இரவு தனது வீட்டில் இருந்த சீனா பொருட்களான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை எரித்தார்.
மற்றவர்களும் சீன பொருட்களை புறக் கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஷக்தி சிதம்பரம் மகா நடிகன், கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன் படங்களை இயக்கியதுடன் தற்போது யோகிபாபு நடிக்கும் பேய் மாமா என்ற நகைச்சுவை கலந்த பேய்படத்தை இயக்கி வருகிறார்.