ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் ஷானவாஸ்….!

ஓடிடியில் வெளியான முதல் மலையாள படம், சூஃபியும் சுஜாதாயும். கடந்த ஜூலை மாதம் அமேசான் ப்ரைமில் இந்தப் படம் வெளியானது. இதை இயக்கியவர் நரனிபுழா ஷாநவாஸ்.

இந்நிலையில் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையை ஈடுபட்டு வந்தார். இதற்காக அட்டப்பாடி வந்துள்ள அவருக்கு கடந்த சனிக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதற்காக கோயமுத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி அறிந்த மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.