இயக்குனர் ஷங்கரின் 25 ஆண்டுகால திரை பயண விழா…!

இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். இயக்குனர் ஷங்கரின் 25 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒன்று கூடி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இயக்குனர் மிஸ்கின் தனது அலுவலகத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த பார்ட்டியில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், மிஸ்கின், மோகன்ராஜா, கவுதம் மேனன், லிங்குசாமி, பா.ரஞ்சித், அட்லி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்துக் கொண்ட அனைத்து இயக்குனர்களும் நீல நிறத்தில் டி-ஷர்ட் அணிந்திருந்தனர். அதில் S25 என குறிப்பிடப்பட்டிருந்தது.