மகேந்திரன் சாருடைய படங்கள் வருடக்கணக்காக மனதிற்குள்ளே இருக்கின்றன ; இயக்குநர் ஷங்கர்

உடல் நலக் குறைவால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.

முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.

மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் இயக்குநர் ஷங்கர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் கமல் பேசியதாவது:

ஒரு சில படங்கள் பார்த்து முடிந்தவுடன் 2, 3 நாட்களுக்கு மனதிற்குள்ளே இருக்கும். இயக்குநர் மகேந்திரன் சாருடைய படங்கள் வருடக்கணக்காக மனதிற்குள்ளே இருக்கின்றன. ரொம்ப நல்ல மனிதர். அவர் இல்லாதது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.

‘2.0’ படத்தில் அக்‌ஷய் குமார் கதாபாத்திரத்துக்காக அவரிடம் டப்பிங் பேச வேண்டும் என்று கேட்டேன். யோசிக்கவே இல்லை, ‘நான் பண்ணித் தருகிறேன்’ என்று உடனே வந்தார். ஆனால், அதைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.