தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 7) காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

“பதவியேற்றுக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அரசாங்க உத்தரவுகளை, குறிப்பாகத் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக்குத் தமிழக அரசின் காப்பீடும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கிற அறிவிப்பையும் நான் பாராட்டுகிறேன்” என்று இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ளார்.