இந்திய திரைத்துறையில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ளார்.

வரும் 21-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தற்போது தனக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளார்.

செப்டம்பர் 9ஆம் தேதி எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் லேசான அறிகுறிகள் தான் இருந்தன. சிடி ஸ்கேனிலும் தொற்றின் அளவு மிகக் குறைவாக இருப்பதாகவே தெரிய வந்துள்ளது. இப்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். 22-ம் தேதி வரை இந்த வீட்டுத் தனிமை நீடிக்கும் என கூறியுள்ளார் .