ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் இயக்குநரான சிறுத்தை சிவா.

சிறுத்தை சிவாவின் தந்தை, ஜெயக்குமார் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இவரின் தந்தை ஜெயக்குமார் டாக்குமெண்டரி போட்டோக்ராபர். இவரது தாத்தா வேலன் பிரபல தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அசிஸ்டன்ட் கேமராமேனாக சேர்ந்தார். இவரது குடும்பமே திரைத்துறையில் சம்பந்தப்பட்ட குடும்பம் என்பது குறிப்பிடதக்கது.