கடந்த ஜூன் 11 அன்று இயக்குநர் சுஜித்துக்கும் பல் மருத்துவரான பரவாலிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு (02.08.20) அன்று ‘சாஹோ’ இயக்குநர் சுஜித்துக்கு ஹைதரபாத்தில் திருமணம் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுஜித் – பரவாலிகா திருமணம் மிக எளிமையாக நடந்தது . பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, பலரும் அவருக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

‘ரன் ராஜா ரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுஜித். அந்தப் படத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து பிரபாஸ் நாயகனாக நடித்த ‘சாஹோ’ படத்தை இயக்கினார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘லூசிஃபர்’ ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுஜித்.