தனது நண்பரின் மறைவுக்கு இயக்குநர் சுசீந்திரனின் உருக்கமான இரங்கல் வீடியோ….!

சமீப காலமாக பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரனின் நீண்ட கால நண்பரான கார்த்தி என்பவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார் . இயற்கை எய்திய கார்த்தி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவிடம் மேனஜராக பணியாற்றியவர்.

இயக்குநர் சுசீந்திரன் ஒரு உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இயற்கை எய்திய கார்த்திக்கு இரங்கல் தெரிவித்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.