தனுஸ்ரீ தத்தாவின் அடுத்த டார்கெட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி

மும்பை

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா நானா படேகரை தொடர்ந்து பிரபல இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பற்றியும் புகார் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ தத்தா ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.   ஒரு தமிழ்ப்படத்திலும் நடித்துள்ளார்.   பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் நானா படேகர் தன்னுடன் தேவையில்லாமல் நெருக்கமான காட்சியில் நடிக்க முற்பட்டதாக  புகார் கூறி இருந்தார்.   அந்த விவகாரம் கடும் சர்ச்சை ஆனது.   இதை நானா படேகர் மறுத்துள்ளார்.

தற்போது அடுத்த படியாக பிரபல பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பற்ரி ஒரு புகார் தெரிவித்துள்ளார்.   தனுஸ்ரீ, “ நான் ஒரு படத்தில் இர்ஃபான் கான் உடன் நடித்துக் கொண்டிருந்தேன்.    அந்த காட்சி நான் அவரை மயக்குவது போல் அமைந்திருந்தது.  அது முழுக்க முழுக்க இரு முகம் மட்டுமே தெரியும் காட்சி ஆகும்.

அப்போது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி என்னை ஆடையைக் கழற்றி விட்டு நடிக்கச் சொன்னார்.  அப்போது தான் இர்ஃபான் முகத்தில் காம உணர்ச்சி தெரியும் என சொன்னார்.  நான் அதற்கு மறுத்தேன்.  இது தேவையற்ற காட்சி எனக் கூறினேன்

எனக்கு ஆதரவாக  இர்ஃபான் அந்தப் பெண் உடையில்லாமல் ஆடினால் தான் நான் முகபாவம் கட்டுவேன் என நினைக்க வேண்டாம் என மறுத்து விட்டார்.   அந்த காட்சியில் எங்களுடன் இருந்த சுனில் ஷெட்டியும் என்னை உடைகளை களைந்து ஆடச் சொன்னதற்காக இயக்குனரை கடுமையாக திட்டினார்.” என தெரிவித்துள்ளார்.

நானா படேகர் சர்ச்சை இன்னும் முடியாத நிலையில் அடுத்த சர்ச்சையா என பாலிவுட்  பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி