96 வயதான எஸ்.எம்.உமர் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார்.அவரின் உடல் 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது

தன்னுடைய 20 வயதில் சினிமாவிற்குள் நுழைந்து உதவி இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளம் வந்துள்ளார் .

600 க்கும் மேற்பட்ட படங்களை வியட்நாம் மொழியில் டப் செய்து வெளியிட்டுள்ளார்.

இளம்பிறை, கதம்பம், குரல், உமர் கய்யாம் என்ற பத்திரிக்கைகளையும் நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு தமிழக அரசு விருது, புதுச்சேரி அரசு விருது, கலைமாமணி விருது, கலைச்செல்வர் விருது, கலை சுடர் விருது என விருதுகள் கிடைத்துள்ளது.