மிஷ்கின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய முன்னணி இயக்குநர்கள்….!

நேற்று இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திரையுலக நண்பர்கள், நடிகர்கள் என பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர் .

தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் மிஷ்கின்.

இதனிடையே, இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாளை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், சசி மற்றும் பாலாஜி சக்திவேல் அனைவரும் மிஷ்கினை வரவழைத்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.