இயக்குநர்கள் நிராகரிக்கும் இசையமைப்பாளராக உருவெடுத்து வுருகிறாரா அனிருத்…!

3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். “கொலவெறி…” பாட்டு மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’ , விஜயின் ‘கைதி’, தனுஷின் ‘மாரி’, விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடி தான்’, அஜித்தின் ‘வேதாளம்’ என தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வந்தவர் அனிருத் .

ரஜினியின் சிபாரிசில் ’பேட்ட’ ‘தர்பார்’ படத்திற்கும் இசையமைத்தார். மேலும், விஜயின் சிபாரிசு காரணமாக ‘மாஸ்டர்’ படத்தின் வாய்ப்பையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர்கள் நிராகரிக்கும் இசையமைப்பாளராக உருவெடுத்து வருகிறார் அனிருத் . அதனுடன் தனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி குடுத்த தனுஷுடன் கருத்து வேறுபாடு வேறு எழுந்துள்ளது .

தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்தே’ படத்திற்கு அனிருத்தை ரஜினி பரிந்துரைத்தும் இயக்குநர் சிவா, நிராகரித்து விட்டாராம். அவசரத்திற்கு தேவை என்றால் அனிருத்தை பிடிக்க முடியாது என கூறிய சிவா டி.இமானை இசையமைப்பாளராக்கி விட்டார்.

அதேபோல்,விஜயின் 65 வது படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸும், அனிருத்தை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு தமனை இசையமைப்பாளராக தேர்வு செய்திருக்கிறார். அவரும் அனிருத் பற்றி இயக்குநர் சிவா சொன்ன காரணத்தை தான் கூறியிருக்கிறார்.