“டைரக்டரின் செக்ஸ் டார்ச்சர்!” : ஹீரோயின் புலம்பல்

‘நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கிக்கொண்ட நடிகை இஷாரா, இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திடுமென தலைமறைவாகிவிட்டார்” என்று  “எங்கடா இருந்த இத்தனை நாளா” படத்தின் இயக்குநர் கெவின் ஜோஸப், பத்திரிகையாளர்களிடம் புலம்பினார். காவல்துறையில் புகார் கொடுக்கப்போவதாகவும் சொன்னார்.

இஷாராவின் தரப்பை அறிய பத்திரிகையாளர்கள் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இந்த நிலையில் இஷாரா, தனது தரப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தன்னிடம் இயக்குநர் கெவின் ஜோசப், “தவறான எண்ணத்துடன்” நெருங்கி காட்சிகளை விளக்கிச் சொல்லியதாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதெல்லாம் டார்ச்சர் செய்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

IMG-20160606-WA0024-Copy

 

ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது, வேண்டுமென்றே காரை மேலே இடித்துவிட்டதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்  மேலும், “இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கும் நான், எந்தப் படத்திலும் இந்தமாதிரி பிரச்னை செய்ததில்லை. வேண்டுமென்றால் அந்த இயக்குநர்களையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றும் கூறுகிறார்.

சரி, இதுகுறித்து விளக்கம் கேட்கலாம் என்று இயக்குநருக்கு ஃபோன் செய்தால்…  திஸ் நம்பர் தஸ் நாட் எக்ஸிட் என்று வருகிறது.