எம்ஜியார் போன்றோரை உருவாக்கிய தியேட்டர்கள்.  மியூசியமாக மாறிவிடக்கூடாது.  

எம்ஜியார் போன்றோரை உருவாக்கிய தியேட்டர்கள்.  மியூசியமாக மாறிவிடக்கூடாது.

இயக்குநர் மிஷ்கின், ஒரு புத்தகப்புழு என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த ஊரடங்கு நேரத்தில் அவர் ஏகப்பட்ட ஆங்கில புத்தகங்களைப் படித்து ,முடித்துள்ளார்.

இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி மிஷ்கின் 11 திரைப்படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட்’ எழுதி ஷுட்டிங் போகத் தயாராக வைத்திருக்கிறார்.

மிஷ்கின் –சிம்பு இணையும் படத்துக்கான ஸ்கிரிப்ட் அதில் ஒன்றா? மிஷ்கினிடம் கேட்டோம்.

‘’ அஞ்சாதே படத்தைச்  சிம்பு பார்த்துக்கொண்டிருந்தபோது இடைவேளையின் போது எனக்கு போன் செய்து படம் நன்றாக இருப்பதாகக் கூறினார்.படம் முடிந்து என்னைச் சந்தித்துப் பேசினார். அண்மையில் கூட நாங்கள் சந்தித்தோம்.

சிம்பு நடிக்க உள்ள படத்தின் கதையை அவரிடம் ஏற்கனவே சொல்லி விட்டேன். அவருக்குப் பிடித்துள்ளது.

இப்போது சிம்பு கைவசம் சில படங்கள் உள்ளன. அவற்றை முடித்து விட்டு என் படத்தில் நடிப்பார்’’ என்று விளக்கம் கொடுத்தார், மிஷ்கின்.

ஓ.டி.டி. தளங்களின் ஆக்கிரமிப்பு குறித்து அவருக்குக் கவலை இருப்பதாகத் தெரிகிறது.

‘’ எம்.ஜி.ஆர். சிவாஜி,ரஜினி,கமல்,விஜய், அஜீத், சூரியா போன்றவர்களை உருவாக்கியது தியேட்டர்கள். அதனை மியூசியமாக மாற்றிவிடக்கூடாது’’ என்கிறார், மிஷ்கின்.

– ஏழுமலை வெங்கடேசன்

கார்ட்டூன் கேலரி