மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை: தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் குட்டு

--

சென்னை:

மிழகத்தில் 11.79 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக அரசு கூறி உள்ள நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை விவரம் அதிகமாக இருந்ததால், உயர்நிதி மன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும், சரியான அறிக்கை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

சென்னையில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் 500-க்கும் மேற்பட்டோர்  காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையம் முன்பு கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், 12.86 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைப்பார்த்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில்11.79 லட்சம் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே இருப்பதாக கூறிய நிலையில், தற்போது எப்படி 12.86 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,  நாளை திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.