தெலுங்கானா,
ரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஊனமுற்றவருக்கு ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுத்ததால், நோயாளியை தரையிலேயே இழுந்து சென்றார் அவரது மனைவி. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ஊனமுற்றவருக்கு ஸ்ட்ரெச்சர், வீல்சேர் கொடுக்க மறுத்ததால், நோயின் வீரியத்தை எண்ணி,  அவரது மனைவி கணவரின் கையை பிடித்து ‘தரதரவென ‘ தரையில் இழுத்து சென்ற சம்பவம் காண்பவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயலுக்கு இது ஒரு சான்றாகும்.

கணவரை தரையில் இழுத்து சென்ற மனைவி
ஸ்ட்ரெச்சர் தராததால் கணவரை தரையில் இழுத்து சென்ற மனைவி

ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆனந்த்பூர் அருகே உள்ளது குண்டக்கல் அரசு மருத்துவமனை.  சம்பவத்தன்று, உடல் நிலை சரியில்லாமல்  பி. ஸ்ரீனிவாச்சாரி என்ற ஊனமுற்றவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். உடனே அவரது மனைவி ஸ்ரீவாணியும் வந்திருந்தார்.
அந்த மருத்துவமனையில் டாக்டரை பார்க்க முதல் மாடிக்கு செல்ல அறிவுறுத்தினர் மருத்துவமனை ஊழியர்கள். அதனால், தனது கணவரை மாடிக்கு அழைத்துச் செல்ல ஸ்டெச்சர் அல்லது வீல் சேர் தரும்படி மருத்துவமனை ஊழியர்களிடம் ஸ்ரீவாணி கேட்டார். அவர்களுக்கு வீல் சேர் வழங்க மருத்துவமனை மறுத்துவிட்டது.
ஆனால், அவரது கோரிக்கையை அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களோ, மருத்துவர்களோ செவிமடுக்க வில்லை.  நேரம் செல்ல செல்ல கணவரின் உடல்நிலை மோசமாவதை உணர்ந்த ஸ்ரீவாணி செய்தவறியாது திகைத்தார்.
தனது கணவருக்கு சிகிச்சை அளிக்க வேறு வழியில்லை என்பதை அறிந்த ஸ்ரீவாணி,  தனது கணவரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவமனை வளாகத்தின் வழியாக மாடியை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
இதைக்கண்ட அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்த மற்ற நோயாளிகளும், பொதுமக்களும் இந்த பரிதாபகரமான நிலையை கண்டு கண்கலங்கினர். ஒருசிலர் அவருக்கு உதவி செய்து,  அந்த ஊனமுற்ற நோயாளியை சிகிச்சைக்காக முதல்மாடிக்கு கொண்டு சென்றனர்.
இது அங்குள்ள பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏழைய எளிய மக்கள் சிகிச்சைக்காகவே அரசு மருத்துவமனை நாடி வருகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் மனிதாபிமானமின்றி நடந்து கொள்கிறார்கள்.
இந்த மனிதாபிமானமற்ற செயல், நாட்டில் மனித நேயம் செத்துவிட்டதாகவே அங்குள்ள பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து மருத்துவமனை பொறுப்பாளர் மல்லிகார்ஜுன் ரெட்டி கூறுகையில்,
`மருத்துவமனையில் 5 ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன. இவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, அனைத்தும் பயன்பாட்டில் இருந்தது அதனால் அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை “ என்றார். சிறிது நேரம் காத்து இருக்கும் படி ஸ்ரீவாணியிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் கணவரை ஸ்ரீவாணி  தரையில் இழுத்து சென்றதாக கூறி உள்ளார்.
இதுபோல் ஒரிசாவில் இறந்த மனைவிக்கு ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்தது, தற்போது ரூ.500, 1000 செல்லாது என்ற காரணத்தால் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தைகள் உயிழிப்பு போன்ற செயல்களால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் மனித நேயம் மறத்துபோய் விட்டதோ என்றே தோன்றுகிறது….