முத்துக்கருப்பன்
முத்துக்கருப்பன்

ராஜ்யசபா கமிட்டித் தேர்தலில், அ.தி.மு.க., – எம்.பி., முத்துக் கருப்பனின் கமிட்டி உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  அவருக்கு பதிலாக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பாராளுமன்றத்தில்  கமிட்டிகள் அமைக்கப்படும்.  இந்த கமிட்டிகளில் உறுப்பினர்களாக இடம்பெற  முக்கிய கட்சிகளிடையே போட்டி நிலவும்.   தேர்தலை தவிர்க்கும் நோக்கில், பார்லிமென்ட் விவகார அமைச்சகம், கட்சிகளின் தலைவர்களிடம் பேசி,  சுமுகமான முறையில், உறுப்பினர்களை நியப்பது வழக்கமான ஒன்று. .
இந்த கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டிலும், அதிகமானோர் போட்டியிட தயாரானார்கள்.  ஆகவே தேர்தல் நடத்துவது அவசியமானது. அதனால், லோக்சபா கமிட்டி எம்.பி.,க்களுக்கான தேர்தல், கடந்த, 26ல் நடந்தது. 22 பேர் அடங்கிய, ‘பப்ளிக் அண்டர்டேக்கிங்’ கமிட்டிக்கு, லோக்சபாவிலிருந்து, 15 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த  நிலையில், ராஜ்யசபாவுக்கு, ஏழு எம்.பி.,க்கள், தேர்தல்  இன்றி  நியமிக்கப்பட்டனர். இக்கமிட்டியில், அ.தி.மு.க., சார்பில், ஏற்கனவே உறுப்பினராக  முத்துக்கருப்பன் இருந்தார்.
மற்ற கமிட்டிகளில், அ.தி.மு.க., சார்பில் ஏற்கனவே இருந்தவர்கள், மீண்டும் பதவிக்கு வந்துள்ளனர் ஆனால்  முத்துக்கருப்பனுக்கு  மட்டும், மீண்டும்  வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  இவருக்கு பதிலாக, மற்றொரு அ.தி.மு.க., – எம்.பி.,யான, செல்வ ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
. முத்துக்கருப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, அரசியல் வட்டாரத்தில்  அதிரச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.  ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அவரது தீவிர ஆதரவாளராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.