Random image

மோடியுடன் வெளிநாடு செல்லும் தனி நபர்கள் விபரங்களை வெளியிட வேண்டும்….தகவல் ஆணையம் உத்தரவு

டில்லி:

பிரதமர் மோடியுடன் வெளிநாடுகளுக்கு செல்லும் தனி நபர்களின் விபரங்களை அளிக்க தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் தவிர, தனி நபர்கள் குறித்த விபரங்களை வழங்க வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் மனு அளித்திருந்தார்.

இந்த தகவல்களை அளிக்க வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுது. பிரதமருடன் விமானத்தில் பயணிக்கும் தனி நபர்கள் குறித்த வழங்க தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.