லக்னோ ஏடிஎம்-ல் நிறம்மாறிய ரூபாய் நோட்டுக்கள்…!

--

லக்னோ,

க்னோவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட 2000 ரூபாய் தாள்கள் நிறம் மாறிய நிலையில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலம் லக்னோவில் எஸ்.பி.ஐ ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் சில ரூபாய் நோட்டுக்கள் வெளிறிய கலரில் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உடனடியாக இதுகுறித்து வங்கியில் முறையிட்டார்.

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் சரிவர அச்சிடப்படாமலும், ஒருபக்கம் அச்சிடாமலும், கலர் மாறுதலாகவும் பிரிண்ட் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய அரசின் ரூபாய் நோட்டு அச்சிடப்படும் அச்சு இயந்திரம் மோசமாக இருப்பதையே இது காட்டுகிறது.

பல  இடங்களில் இதுபோல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. கள்ள நோட்டுக்களை ஒழிக்க புதிய நோட்டுக்கள் வெளியிடுவதாக அறிவித்த மத்தியஅரசு, இதுபோன்ற நோட்டுகளை வெளியிட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.