விஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை?
நியாஸ்பாண்ட்:
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருக்கும் சுகாதாரத்துறையை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனுக்கு மாற்ற அ.தி.மு.க. மேல்மட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி., ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதனால் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகோயர் பதவிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவர்களை பதவி நீக்க வேண்டும் என்று மாநில அரசை பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அமைச்சர்கள் சிலரும், விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயபாஸ்கர், முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அதற்கு முதல்வர் தரப்பில், “நீங்கள் அமைச்சராக இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், சுகாதாரத்துறையில் இருக்கக் கூடாது என்று சிபிஐ அதிகாரிகளின் கருதுகிறார்கள். காரணம், குட்கா விவகாரத்தில் சுகாதாரத் துறையின்கீழ் வரும் உணவு பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க இருக்கிறார்கள். அவர்கள், உங்களைப்பற்றி பேச பயப்படுவார்கள் என்று சிபிஐ அதிகாரிகளின் நினைக்கிறார்கள். இதை இதை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே சுகாதாரத்துறையை விட்டு விலகியிருங்கள்” என்று கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விஜயபாஸ்கருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான டாக்டர்.மணிகண்டனை நியமிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
டாக்டர் மணிகண்டன் 13 வருடங்கள் டாக்டராக இருந்தவர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் பிறகு மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்ற நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில், “. . விஜயபாஸ்கரும் மணிகண்டனும் ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 2016ம் ஆண்டே காதாரத் துறை அமைச்சராக வேண்டும் என மணிகண்டன் விரும்பினார் சசிகலா இதற்காக அவர் முயற்சித்தாலும் ஏனோ அது நடக்கவில்லை. தற்போது, குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் சிக்கியுள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை அடைய மணிகண்டன் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்” என்று பேசப்படுகிறது.