தமிழகத்தில் தமிழுக்கு கிடைக்கும் மரியாதை? வைரல் வீடியோ

சென்னை:

மோடி அரசின் பல்வேறு திட்டங்களால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மத்தியஅரசு அலுவலகங்களில் தமிழர்கள் இல்லாத நிலையே ஏற்பட்டு உள்ளது.

ரயில்வே, அஞ்சல்துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் திட்டமிட்டு வடமாநிலத்தவரை வேலைக்கு அமர்த்தி வரும் மத்தியஅரசு, மக்கள் அன்றாடம் புழங்கும் ரயில் நிலையங்களில் வட மாநிலத்தவரை அமர்த்திக்கொண்டு தமிழ் மக்களை அல்லல்படுத்தி வருகிறது.

நமது தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே….  அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, அவர்கள் அமைதியாக அடுக்கடியில் அமர்ந்துகொள்வார்கள்…..

இதுதொடர்பாக எந்தவொரு ஆணித்தரமான நடவடிக்கையும் எடுக்க முன்வர மாட்டார்கள் என்பதே உண்மை…

சமீபத்தில் ரயில் நிலையத்தில், டிக்கெட் முன்பதிவு செய்ய சென்ற ஒருவரின் முன்பதிவு படிவம் தமிழில் எழுதப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து புதிய ரயில்வே ஊழியர், முன்பதிவு செய்ய வந்தவரிடம் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தமிழுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை நீங்களும் பாருங்களேன்…