கொரோனா : சென்னை கண்ணகி நகரில் தீ அணைப்பு படை மூலம் கிருமி நாசினி தெளிப்பு

--

சென்னை

சென்னை மாநகராட்சி கொரோனா பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுத்து வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பல நகரங்களில் பரவி வருகிறது.

தமிழக தலைநகர் சென்னையில் இதுவரை சுமார் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி நகரின் பல இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து வருகிறது.

சென்னை கண்ணகி நகரில் தமிழக தீயணைப்பு படை உதவியுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த புகைப்படங்கள் வைரலாகிறது.