நடிகர்கள் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி,  நீக்கம்.

--

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்குவதாக சென்னையில் நடைபெற்ற சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சரத்குமார் - ராதாரவி
சரத்குமார் – ராதாரவி

நடிகர்கள் சங்க கட்டிடம் கட்டும் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி இன்றைய செயற்குழு கூட்டத்தில் அவர்களை நீக்குவதாக தீர்மானம் நிறைவேறியது.

அடுத்து நடைபெறப் போகும் பொதுக்குழுவிலும் இதே தீர்மானம் நிறைவேறினால் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.