டில்லி,

பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், விளக்கமளிக்குமாறு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகாரில் துணைமுதல்வராக உள்ள லல்லுவின் மகன் தேஜஸ்வி மீது சிபிஐ குற்றச்சாட்டு கூறியதை தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். இதன் காரணமாக இரு கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், உடடினயாக பாரதியஜனதா ஆதரவுடன் அடுத்த 16 மணி நேரத்திற்குள் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

இந்செநிலையில, எம்.எல்.சர்மா என்பவர் நிதிஷ்குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களைப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவைப் பின்பற்றாமல் தன்மீதான கிரிமினல் வழக்கை மறைத்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் நிதிஷ்குமார் தேர்தலில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்து வந்துள்ளார்.

எனவே, அவரைச் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்க நிதிஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.