18 எம் எல் ஏல்க்கள் தகுதி நீக்கம் : ஹாஸ்டல் அறைக்கு சீல் வைப்பு

சென்னை

குதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் விடுதி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவி நீக்கம் செய்யக்கோரி தினகரன் அணியை சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுனருக்கு மனு அளித்தனர்.    அதை ஒட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டது.   அதில் ஒருவர் மட்டும் மன்னிப்பு கோரியதால் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் உத்தரவிட்டார்.   அதை எதிர்த்து அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் இரு நீதிபதிகள் வேவ்வேறு தீர்ப்பு அளத்ததால்  வழக்கை மூன்றாம் நீதிபதி விசாரித்து தீர்ப்பு அளித்தார்.   அந்த தீர்ப்பின் படி சபாநாயகர் உத்தரவு செல்லும் எனவும் 18 சட்டப்பேரவை உறுப்பினரும் தகுதி இழந்துள்ளதாகவும் உறிதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களும் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு அளித்து வந்த அனைத்து சலுகைகளும் விலக்கிக் கொள்ளப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.    அவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அளிக்கப்பட்டுள்ள அறைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும்  அவ்வாறு அவர்கள் காலி செய்யாததால் அவர்களுடைய அறைகளை பூட்டி சீல் வைத்துள்ளதகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

You may have missed