சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு தலைகுனிவு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கக் கூடிய காஷ்மீரிலேயே இடைத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழகத்துக்கு தலைக்குனிவு என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

மேலும்,  அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் ரத்துக்குப் பின் தேர்தல் நடத்தப்பட்ட போது மீண்டும் அதே வேட்பாளர்களே போட்டியிட்டதாகவும், மீண்டும் பண விநியோகம் செய்யப்பட்ட தாகவும் குறிப்பிட்டுள்ளளார்.

ஊழல், பணப்பட்டுவாடா செய்த கட்சிகளை தேர்தலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும்,   பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்தால் மட்டுமே ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை தடுக்க முடியும்.

தேர்தல் ரத்து நியாயமாகவும் நேர்மையாகவும் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களுக்கு தண்டனை..

இவ்வாறு அவர் கூறியுளாளர்.