சென்னை:

குதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ் செல்வன் இன்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது இது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்த நிலையில், ஏராளமான அமமுகவினர் மீண்டும் தாய்க்கழகத் திற்கே திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், டிடிவியை நம்பி, அவரு க்கு ஆதரவாக செயல்பட்ட காரணமாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை இழந்து தவித்து வரும் பல முன்னாள் எம்எல்ஏக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாகவும், அதன் காரணமாக  மீண்டும் அதிமுகவில் சேர உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

டிடிவியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த அதிரடி பேட்டி கொடுத்து, அதிமுகவினரை தெறிக்க விட்ட அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் சமீப காலமாக அமைதியாக இருந்து வருகிறார். அவருக்கும், டிடிவிக்கும் இடையே லடாய் என்று உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. தங்கத்தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் சேரலாம் என்று கூறப்படுகிறது. அவருடன் மேலும் பல அதிருப்தி அமமுக நிர்வாகிகளும் தாய் கழகத்தில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் சேருவதற்கு பதில் மொட்டை  கிணத்துல விழுந்து சாகலாம் என்று தமிழ்ச்செல்வன் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.