தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் சிறையில் சந்திப்பு

சென்னை:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சசிகலா, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் இன்று பெங்களூருவில் உள்ள பரபரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சசிகலாவுடன் சந்தித்து பேசினார்.

டிடிவி தினகரன் மற்றும், தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமு, உமாமகேஸ்வரி, பார்த்திபன் உள்பட  9 பேர் சசிகலாவை சிறையில் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.

சசிகலாவை காண சிறை வளாகத்தில் காத்திருந்த  காட்சி

சமீபத்தில், சசிகலா ஆதரவாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் அணியினர் கலகலத்துப்போய் உள்ளது.

இந்த நிலையில், தங்கத்தமிழ்ச் செல்வன் தலைமையில்,தகுதி நீக்கம் செய்யப் பட்ட 9 எம்எல் ஏக்கள் இன்று சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினர்.

இதற்கிடையில் முதல்வர்  எடப்பாடி உள்பட அதிமுக முக்கியஸ்தர்கள், பிரிந்து சென்றவர்கள் திரும்பவும் அதிமுகவுக்க  வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 பேர் மட்டும் இன்று சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீதமுள்ள 8 பேர் ஏன் சந்திக்கவில்லை என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது.

அவர்கள் மாற்று கட்சியில் சேர திட்டமிட்டுள்ளார்களா என்பது குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.