ஆட்சிய கலைங்க..!: கார்த்தி சிதம்பரம்

சென்னை:

மிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென இன்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

2007-2008- ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் கார்த்தியிடம் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று பேசப்பட்டது. இதற்கிடையே கார்த்தி, திடீரென லண்டன் சென்று திரும்பினார்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் “ என்று தெரிவித்தார்.