” குதிரை பேரத்தை தடுக்கவே காஷ்மீர் சட்டசபை கலைப்பு “- ஆளுநர் மாளிகை விளக்கம்

காஷ்மீரில் குதிரை பேரத்தை தடுப்பதற்காக சட்டசபையை கலைத்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.

2014ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பாம்னை கிடக்காதாதால் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக ஆதரவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. அப்போது மெஹபூபா முக்தி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை திரும்ப பெற்றது.

assembly

இதனால் ஜம்மு- காஷ்மீரில் கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. தற்போது ஜம்மு- காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க ஒருபுறம் பாஜக முயன்று வரும் நிலையில், மற்றொருபுறம் மக்கள் ஜனநாயக கட்சி , காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவெடுத்தது.

இதையடுத்து தங்களை ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹ்பூபா முக்தி உரிமை மோரி இருந்த நிலையில், அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டசபையை திடீரென கலைத்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபையை கலைத்ததற்கான காரணம் குறித்து அம்மாநில ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குதிரை பேரத்தை தடுப்பதற்காகவே சட்டசபை கலைக்கப்பட்டது. அரசியல் கருத்தில் முரண்பாடு கொண்ட கட்சிகளால் நிலையான ஆட்சியை அமைக்க இயலாது. சாத்தியமற்ற சூழ்நிலை நிலவுவதால் சட்டசபை கலைக்கப்பட்டது.

சட்டசபை கலைக்கப்பட்டதால் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலோடு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படலாம் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி