தொலைதூர ( அஞ்சல் வழி) கல்வி குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

டில்லி:

தொலைதூர வழிக்கல்வி மூலம் தொழில்நுட்ப படிப்புகளை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்தது. மேலும்  இது தொடர்பாக பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றம், “கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது” என உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதே நேரம், “தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப கல்விகளை படிக்கலாம்” என்று ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.