லண்டன்: நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணியின் ஸ்டார் பயிற்சியாளராக இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் வெற்றியின் பின்னால், சோகம் ஒன்று மறைந்துள்ளது.

அந்த சோக செய்தியை ஜோஃப்ரா ஆர்ச்சரின் தந்தை செய்தியாளரிடம் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இங்கிலாந்து தனது உலகக்கோப்பை பயணத்தை தொடங்கிய சில தினங்களில், ஆர்ச்சர் பிறந்த வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் பார்படோஸில், அவரின் நெருங்கிய உறவுக்கார இளைஞன் அஷான்டியோ, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சோகம் ஆர்ச்சரை பெரியளவில் தாக்கினாலும், அதை வெளிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. அதையும் மீறியே அவர் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து சார்பாக, உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக மாறினார்.

அவர் வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 20. மேலும், சவாலான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தரப்பில் சூப்பர் ஓவரை வீசிய பந்துவீச்சாளரும் இவரே.

இறந்துபோன உறவுக்கார இளைஞனும் ஆர்ச்சரின் சம வயதுதான். இத்தகவலை ஆர்ச்சரின் தந்தை ஃப்ராங்க் செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டார்.