சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு காலக்கட்டத்தின்போது, பொதுமக்களுக்கு அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக  முதல்வர் ஸ்டாலின் அரசு உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் 24ந்தேதி முதல் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு தேவையான காய்கறிகளை, அரசு வணிகர்களின் உதவியுடன் நடமாடும் வண்டிகள் மூலம் தெருத்தெருவாக விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், மேலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்வது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்  தற்போது  சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன்,  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே  பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள்  பங்கேற்று இருக்கிறார்கள்.

[youtube-feed feed=1]