விநியோகஸ்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள ‘மாஸ்டர்’ படக்குழு…!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன.

இந்த படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது முன்னனி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான east coast production நிறுவனத்தின் மகேஷ் எஸ் கோநீறு காரு என்பவர் வாங்கியுள்ளதாக தவல்கள் கசிந்துள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தளபதி 64’ என்று அழைத்து வரப்பட்ட இந்தப் படத்துக்கு ‘மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் மாஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் முடித்துவிட்டது. மேலும், இப்போதே அதிரடியாகத் தென்னிந்தியாவில் விநியோகஸ்தர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அந்தப் பட்டியலின்படி:

திருநெல்வேலி, கன்னியாகுமரி – ஸ்ரீ சாய் கம்பைன்ஸ்

மதுரை – சுஷ்மா சினி ஆர்ட்ஸ்

கேரளா – மலபார் மற்றும் கொச்சின் ஏரியா – ஃபார்ட்டியூன் சினிமாஸ்

கேரளா – திருவனந்தபுரம் ஏரியா – மேஜிக் ப்ரேம்ஸ்

திருச்சி, தஞ்சாவூர் – ப்ளஸ் மேக்ஸ் பிலிம்ஸ்

சேலம் – ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ்

கோயம்புத்தூர் – கந்தசாமி சினி ஆர்ட்ஸ்

வட ஆற்காடு, தென் ஆற்காடு – 5 ஸ்டார் செந்தில்

செங்கல்பட்டு – தனம் பிக்சர்ஸ்

சென்னை – ஸ்ரீ கற்பக விநாயகா பிலிம்ஸ் சர்க்யூட்ஸ்

ஆந்திரா, தெலங்கானா – ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ்

கர்நாடகா – தீரஜ் எண்டர்பிரைசர்ஸ்