2.o  படத்தை வாங்க விரும்பாத விநியோகஸ்தர்கள்!

பொதுவாக ரஜினி படங்கள் என்றால் விநியோகஸ்தர்களுக்கு லட்டு மாதிரி. விலை அதிகம் என்றாலும் அதற்கேற்ற லாபம் உண்டு. அதனால்தானே “சூப்பர் ஸ்டார்” என்று பட்டம் கொடுத்து கொண்டாடுகிறார்கள்!

ஆனால்,  ரஜினியின் லேட்டஸ்ட் படமான 2.o  படத்தை வாங்க தமிழகத்தில் எந்த விநோயகஸ்தரும் தயாராக இல்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை!

எந்திரன் 2:0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்றுவரை விநியோகஸ்தர்கள் எவரும் இந்தப் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இதற்கு முதல் காரணம்.. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டம் என்று கூறப்படுவதால் அதற்கேற்ப விநியோக விலையும் அதிகமானது.  அந்த அளவுக்கு வாங்கினால்.. என்னதான் ரஜினி படமாக இருந்தாலும்… வசூல் ஆகுமா என்கிற பயம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

அடுத்து..  இந்த பட்டத்தின் டிக்கெட்டுகளை அரசு நிர்ணயித்திருக்கும் விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்ற ரஜினியின் அறிக்கை. முதல் சில நாட்கள் மிக அதிக விலைக்கு விற்றால்தான் லாபம் பார்க்க முடியும் என்கிற நிலையில் ரஜினியின் அறிவிப்பு விநியோகஸ்தர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விட்டது.

மூன்றாவது காரணம்… இந்தப் படம் 3D &2D இந்த முறையில் எடுக்கப்பட்டுள்ளது. .E சினிமா திரையரங்குகளில் இந்த படத்தை திரையிட முடியாது !  5 லட்ச ரூபாய் தந்தால் 3Dக்கு தேவையான ஸ்கிரீன் புராஜேக்ட்டர் கண்ணாடிகள் இவை அனைத்தையும் தருவதாக தயாரிப்பு நிர்வாகம் லைக்கா கூறியதை எவரும் ஏற்கவில்லை.

இது குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் சிலரிடம் பேசினோம். அவர்கள், “இந்த படத்தை தயாரிக்க ரூ. 450 கோடி ஆனது என்கிறார்கள்! படத்தின் தமிழக உரிமை ரூ. 200 கோடிக்கு எஸ்டிமோட் போட்டிருக்கிறார்கள்.  டிக்கேட்டை 500, 1000  ரூபாய்க்கு விற்றால் தான் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் லாபம் பார்க்க முடியும். ஆகவேதான் எவரும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை” என்றார்கள்.

தற்போது தமிழகம் முழுதும் லைக்கா நிறுவனமே, சிலரது மூலமாக நேரடியாக திரையங்குகளில் திரையிடுகிறது.

பின் குறிப்பு: கஜா புயல் பாதிப்பு காரணமாக, டெல்டா மாவட்டங்களில்  திரையிடுவதற்கான ஏற்பாடுகளை இன்னமும் செய்யவில்லை. ஆகவே அங்கு படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியே.

#Distributors #donotwant #buy #2.o #film #rajini

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2.o  படத்தை வாங்க விரும்பாத விநியோகஸ்தர்கள்!, Distributors do not want to buy 2.o film
-=-