திருவாரூர்

லகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர் தேர் அழகு என்பது முதுமொழி.    தேர் என்றாலே திருவாரூர் என்பது புது மொழி.   அவ்வாறு புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டத்தை ஆழித்தேரோட்டம் என அழைப்பது வழக்கம்.   நாடெங்கும் உள்ள பலரும் இந்த தேரோட்டத்தை காண திருவாரூர் வருவார்கள்.   இந்த வருட தேரோட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடு கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.   அதில் மாவட்ட ஆட்சியர் கலந்துக் கொண்டு ஆய்வு நடத்தினார்     தேர் செல்லும் நான்கு வீதிகளிலும் மற்றும் தேருக்கு முன்னும் பின்னும் குடிநீர் வினியோகம் தடை இன்றி செய்யப்பட உள்ளது.   அத்துடன் இந்த வீதிகலில் இரு தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.

ஆழித்தேரோட்டத்தின் போது 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.   மற்றும் ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 2 உதவியாளர்கள் கொண்ட குழு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

தேரின் சக்கரங்கள் மற்றும் முட்டுக்கட்டைகள் ஆகியவைகளை நேரடியாக பரிசோதித்த மாவட்ட ஆட்சியர் வழியில் உள்ள மின்சாரக் கம்பிகள், தொலைபேசி கம்பிகள், மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளார்.