க்னோ

த்திரப் பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று திரியும் பசுக்களை இந்த மாதம் பத்தாம் தேதிக்குள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என மாவட்ட நீதிபதிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுக்களைக் கொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் வயதான மாடுகளை பலர் ஆதரவின்றி விட்டு விடுகின்றனர். கவனிப்பார் இல்லாமல் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அஜ்மீர் பகுதியில் இவ்வாறு திரியும் கால்நடைகள் பயிர்களை மேய்ந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் பசுக்களை பள்ளிக்கூடத்தில் அடைத்து வைத்தனர்.

அதன் பிறகு மாநில நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு இந்த பசுக்களை விடுவித்து பசுக்கள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். இதை ஒட்டி ஆதரவற்று திரியும் பசுக்களுக்காக காப்பகம் அமைக்க நிதித் தேவைக்காக அரசு மது பானங்கள் மீது 0.5% கூடுதல் வரி விதித்தது. அத்துடன் நேற்று முன் தினம் இரவு உ. பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கூட்டம் ஒன்றை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்தினார்.

அந்த கூட்டத்தில் யோகி, “ஆதரவற்று விடப்பட்ட பசுக்கள் விளை பயிர்களை மேய்ந்து நாசம் செய்து வருகின்றன. ஆகவே கால்நடைகள் உட்பட ஆதரவற்று திரியும் அனைத்து விலங்குகளையும் வரும் 10 ஆம் தேதிக்குள் காப்பகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும். மாவட்ட நீதிபதிகள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அத்துடன் புதிதாக விதிக்கப்பட்ட 0.5% கூடுதல் வரி மூலம் மேலும் காப்பகங்கள் அமைக்க வேண்டும்

அத்துடன் நகர்ப்புறங்களில் இந்த கால்நடைகளால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கிராமப் புறங்களில் பயிர்களை இவைகள் பாழாகுவதாக புகார்கள் வருகின்றன. ஆகவே இது போல் மீண்டும் நிகழாதபடி மாவட்ட நீதிபதிகள் நடவடிக்கை அமைய வேண்டும். அதே நேரத்தில் ஆதரவற்று திரியும் பசுக்களை அடைத்து வைப்போர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.