மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆலோசனை

சென்னை:

ழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த கமல்ஹாசனுக்கு மேலதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில்  இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில்,   உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்கப்பட்ட தாகவும், தேர்தலில் வெற்றிவாய்ப்பு குறித்த ஆலேசானை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல, சமீப நாட்களாக பேசப்பட்டு வரும், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து கட்சி நிர்வாகி களுடன் தீவிரமாக ஆலோசனை நடந்தது என்றும், ரஜினியுடன் இணைந்து செயல்பட்டால், ஏற்படும் பிரச்சினை கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய கமல், எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம் என்றும், தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம்  என்றவர், ரஜினியுடன் இணைப்பு என்பதை இந்த தேதியில் என்று சொல்ல முடியாது, என்னுடைய உழைப்பிற்கு இனிவரும் காலங்களில் பலன் கிடைக்கும் என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும்,  என்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி