தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,43,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11,344 பேர் உயிர் இழந்து 7,13,584 பேர் குணம் அடைந்து தற்போது 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 2,04,862 பேர் பாதிக்கப்பட்டு 3,716 பேர் உயிர் இழந்து 1,95,291 பேர் குணம் அடைந்து தற்போது 5,855 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 45,094 பேர் பாதிக்கப்பட்டு 576 பேர் உயிர் இழந்து 43,532 பேர் குணம் அடைந்து தற்போது 986 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,849 பேர் பாதிக்கப்பட்டு 693 பேர் உயிர் இழந்து 43,259 பேர் குணம் அடைந்து தற்போது 897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.