கோவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை:

கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 44 பேர் மீண்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 172 ஆக உள்ளது.

கோவையில் இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல் பட்டு மாவட்டத்தில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You may have missed