தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5752 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,08,511 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் இதுவரை 1,49,583 பேர் பாதிக்கப்பட்டு 10,436 பேர் உயிர் இழந்து இதுவரை 1,36,155 பேர் குணம் அடைந்துள்ளனர்.,

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 30,743 பேர் பாதிக்கப்பட்டு 2035 பேர் உயிர் இழந்து இதுவரை 28,221 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 28,620 பேர் பாதிக்கப்பட்டு 485 பேர் உயிர் இழந்து இதுவரை 26,092 பேர் குணம் அடைந்துள்ளனர்.