சென்னை: 
மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப அலட்சியமாக இருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.

அரியலூரில் 119 பேர், செங்கல்பட்டில் 241 பேர், சென்னையில் 2921 பேர், கோயம்புத்தூரில் 387 பேர், கடலூரில் 366 பேர், தருமபுரியில் 25 பேர்,  திண்டுக்கலில் 64 பேர், ஈரோடில் 78 பேர் கள்ளக்குறிச்சியில் 5 பேர், காஞ்சிபுரத்தில் 182 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதே போன்றும் கன்னியாகுமரியில் 419 பேர் கரூரில் 44 பேர், கிருட்டிணகிரியில் 51 பேர், மதுரையில் 242 பேர். நாகப்பட்டினத்தில் 255, நாமக்கலில் 21 பேர், நீலகிரியில் 21 பேர், பெரம்பலூரில் 116, புதுக்கோட்டையில் 399, இராமநாதபுரத்தில் 313 பேர், ராணிப்பேட்டையில் 5 பேர், சேலத்தில் 130 பேர், சிவகங்கையில் 386 பேர், தென்காசியில் 16, தஞ்சாவூரில், 386 பேர், தேனியில் 63 பேர், தூத்துக்குடியில் 165 பேர், திருச்சிராப்பள்ளியில் 401 பேர், திருநெல்வேலியில் 257 பேர், திருப்பத்தூரில் 4 பேரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.இதே போன்று திருப்பூரில் 67 பேர், திருவண்ணாமலையில், 76, வேலூரில் 168 பேர், விருதுநகரில்129 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக மாவட்டங்களில் மொத்தமாக 9424 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.