திவாகரன் புதிய கட்சி தொடக்கம் : அம்மா அணி

ன்னார்குடி

ன்னார்குடியில் அம்மா அணி என்னும் புதிய கட்சியை திவாகரன் தொடங்கி உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்துக்குப் பின் அதிமுக மூன்றாக உடைந்தது.  அதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய அணிகள் இணைந்தன.    முன்றாவது அணியான தினகரன் அணி தனித்து இயங்கியது.   தற்போது தினகரன் அ ம மு க என்னும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

அவருக்கும் அவருடைய உறவினர் திவாகரனுக்கும் இடையே தற்போது அறிக்கைப் போர் நடந்து வருவது தெரிந்ததே.   இந்நிலையில் திவாகரன் அம்மா அணி என்னும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

இது குறித்து திவாகரன், “தினகரன் இழுத்து மூடிய அம்மா அணிக்கு புத்துயிர் அளிக்க நான் இந்தக் கட்சியை தொடங்கி உள்ளே. நான் அவரை இந்த அம்மா அணியில் இணைய அழைக்கப் போவதில்லை.   இந்த அணியில் இணைய விரும்புவர்கள் இணையலாம்.   விரைவில் மாவட்ட ரீதியாக நிர்வாகிகள் நியமிக்கப் பட உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

திவாகரன் ஏற்கனவே அம்மா அணி நீடிக்கும் எனக் கூறியது, தினகரன் அ ம மு க ஆரம்பித்ததை கண்டித்ததும் குறிப்பிடத் தக்கது.

You may have missed